எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கச்/தேஜ்பூர் : நாடு முழுவதும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாமின் தேஜ்பூரிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் இந்த தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது வீரர்களிடையே பிரதமர் கூறுகையில், "தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லாத அரசு இங்கு அமைந்துள்ளது. 21-ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு நாம் நமது ராணுவத்தை, பாதுகாப்பு படைகளை நவீன வளங்களைக் கொண்டு புதுப்பித்து வருகிறோம். உலகின் மிகவும் நவீனமான ராணுவத்துடனான போட்டியில் நமது ராணுவத்தை நிறுத்த விரும்புகிறோம். இதன் அடிப்படை நோக்கமே பாதுகாப்புத்துறை தன்னிறைவைப் பெறுவதுதான். நாம் 1 தரைப்படை, 1 வான்படை, 1 கடற்படையை பார்க்கிறோம். ஆனால் அவர்களுக்குள் கூட்டுப்பயிற்சி உண்டு அதன்படி நாம் அவர்களை 111 ஆக பார்க்கலாம்." இவ்வாறு பிரதமர் பேசினார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாமின் தேஜ்பூரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது அமைச்சர் கூறுகையில், "எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் நிலவி வந்த பிரச்சினைகள் தொடர்பாக முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
நீண்ட காலமாக நடந்து வந்த ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமாக எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் சில பகுதிகளில் பிரச்சினை முடிவினை எட்டியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தினை எட்டியுள்ளோம். இது பெரிய அளவிலான முன்னேற்றம் தான்.
உங்களுடைய துணிச்சல் மற்றும் ஒழுக்கத்தினால்தான் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று நான் கூறுவேன். உங்களுடைய வீரத்தை உணர்ந்ததினால் தான் சீனாவுடனான பேச்சுவார்த்தை சாத்தியமானது என்று நான் நம்புகிறேன். ஒருமித்த கருத்தின் மூலம் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டுவதையே நாம் விரும்புகிறோம்.
நம் நண்பர்களை நாம் மாற்ற முடியும், அண்டை வீட்டாரை நம்மால் மாற்ற முடியாது என்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பய் கூறியதை நாம் மனதில் கொள்ள வேண்டும். நமது அண்டை நாட்டவருடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணவே விரும்புகிறோம். இது இந்தியாவின் தெளிவான கொள்கை. ஆனால் சில நேரங்களில் சூழல் காரணமாக நமது எல்லைப் பாதுகாக்க நாம் சண்டையிட வேண்டியுள்ளது. நமது ஆயுத படைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதியை நிலை நாட்ட அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்" இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லைக்கட்டுப்பட்டு கோட்டில் இந்திய - சீன வீரர்கள் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2024.
01 Nov 2024 -
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: விஜய்யின் அறிவிப்பு மீது திருமாவளவன் விமர்சனம்
01 Nov 2024சென்னை : ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது
-
அமரன் விமர்சனம்
01 Nov 2024இந்திய ராணுவத்தில் சேவை செய்து உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அமரன்.
-
பி.பி.எல். நிறுவனர் காலமானார்
01 Nov 2024பெங்களூரு : பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94.
-
பாக்.கில் குண்டுவெடிப்பு: 7 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
கோவையில் விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Nov 2024சென்னை : கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் அறிவித்துள்ளா
-
மாநிலங்கள் உருவாக்க தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
01 Nov 2024புதுடெல்லி, மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத
-
இஸ்ரேலுக்கு உதவியா? - எகிப்து ராணுவம் மறுப்பு
01 Nov 2024கெய்ரோ : இஸ்ரேலுக்கு உதவுவதாக வெளியான தகவலுக்கு எகிப்து ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பொறுத்தே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
01 Nov 2024பெங்களூரு, மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களிடம் தான் வலியுறுத்தி இருப்பதாக மல்லிகார்
-
தீபாவளி நாளில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு
01 Nov 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தத
-
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்
01 Nov 2024ராமேசுவரம் : இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்.
-
எல்லை போராட்ட தியாகிகள் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
01 Nov 2024சென்னை, தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன் என்று எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தங்கம் விலை சரிவு
01 Nov 2024சென்னை : தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
-
காஷ்மீர் பா.ஜ. எம்.எல்.ஏ. மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Nov 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா (வயது 59) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிக்க காங்கிரஸ் திட்டம்
01 Nov 2024திருப்பதி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெண்கள், விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 24 பேர் உயிரிழப்பு
01 Nov 2024பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என்றும் லெபனானில் உள்ள அதிகாரபூர்
-
இமாச்சல்லில் பல நூற்றாண்டுகளாக சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடாத கிராம மக்கள்
01 Nov 2024ஹமிர்பூர் : இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் இமாசல பிரதேசத்தில் உள்ள
-
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
01 Nov 2024சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.
-
இந்துக்களை புறக்கணித்து விட்டனர்: கமலா, ஜோ பைடன் மீது டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
01 Nov 2024வாஷிங்டன், கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர்.
-
ஸ்பெயினில் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 150-ஐ தாண்டியது
01 Nov 2024பார்சிலோனா : ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2024புதுடெல்லி : பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசாராக இருந்தவர் பிபேக் டெப்ராய் (வயது 69) குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு உயிரிழந்தத
-
90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் சாடல்
01 Nov 2024கேரளா, 90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்த டிரம்ப்புக்கு விஹெச்பி நன்றி
01 Nov 2024புதுடெல்லி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நன்றி தெரிவித்துள்ளது.
-
வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டி
01 Nov 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டியிடவுள்ளனர்.
-
தஞ்சை பெரியகோயில் 1039-வது சதய விழா பந்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது
01 Nov 2024தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா நேற்று நடந்தது.