முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகளால் கனவு மெய்ப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
CM-3 2024-11-06

சென்னை, அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்றடைகிறதா? என்பதை நேரில் சென்று கேட்கும் வகையில், 'கள ஆய்வில் முதல்வர் ' என்ற புதிய திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து உள்ளார். அதன்படி, முதல் முறையாக கோவை மாவட்டத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடங்கியுள்ளார்.

2 நாட்கள் கோவையில் தங்கி இருந்த முதல்வர்  நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் ரூ.158.32 கோடியில் விளாங்குறிச்சி டைடல் பார்க் - தகவல் தொழில் நுட்பக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியார் நூலகம் - அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இது குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நேற்று நான் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளை, குறித்த காலத்தில் நிறைவேற்றிக் காட்டிய அதிகாரிகளையும்; தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திக் காட்டி வரும் அதிகாரிகளையும்;மாற்றுத்திறனாளித் தோழர்களுக்காக நமது திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை அதிக அளவிலான பயனாளிகளுக்குக் கொண்டு சேர்த்த அதிகாரிகளையும் பாராட்டி ஊக்கமளித்தேன். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் இத்தகைய அதிகாரிகளால்தான், நமது கனவுகள் மெய்ப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து