முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க ரேவந்த் ரெட்டி முடிவு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      இந்தியா
Revanth-Reddy 2023-12-03

புதுடில்லி, தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா முதல்வர்  ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.  நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.

இதன்பின்பு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேவந்த் ரெட்டி, "தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன், இது தொடர்பாக எனது கட்சி தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின்  தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடைபெறும் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்தார். மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் வடஇந்தியாவை விட அதிக வரி கொடுக்கிறோம். நாங்கள் அதிக தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம்.

பா.ஜ.க.  வளர தென்னிந்தியா அனுமதிக்காததால் தென்னிந்தியாவை பா.ஜ.க.  அரசு பழிவாங்குகிறது. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஏன் கர்நாடகா கூட பா.ஜ.க. வை தோற்கடித்துள்ளனர். அவர்களுக்கு ஆந்திராவில் கூட இல்லை. இதற்கு பெயர் தான் பழிவாங்கும் அரசியல். முதல்வர்  மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து