முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதாந்திர மகளிர் உதவித்தொகை உயர்வு: புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

புதன்கிழமை, 12 மார்ச் 2025      இந்தியா
Rangaswamy 2024 08 08

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித் தொகை பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரப்படுகிறது. இந்த நிதியாண்டு முதல் இந்த உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2025-26 நிதியாண்டு பட்ஜெட் திட்ட மதிப்பீடு ரூ.13,600 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் விவரம்: > தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு அறிமுகப்படுத்தப்படும். விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.2,000 வரும் நிதியாண்டு முதல் தரப்படும். வனமில்லா பகுதிகளில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

கடந்த 2015 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும். புதிதாக சொற்பொழிவாளர், புகைப்படம், திரைப்படம், ஆவணப்படம் ஆகியத்துறைகளுக்கும் கலைமாமணி விருது வரும் நிதியாண்டு முதல் தரப்படும். காரைக்கால் அம்மையார் பெயரில் விருது வழங்க உத்தேசித்துள்ளோம். பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடக்கவுள்ளது. வரும் நிதியாண்டு முதல் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச அரிசியோடு 2 கிலோ கோதுமை இலவசமாக தரப்படும்.

மதிய உணவுத்திட்டத்தில் வாரம் 3 நாட்களுக்கு தரப்படும் முட்டை வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளி நாட்களிலும் தரப்படும். பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித் திட்டத்தின் கீழ், சென்டாக் மூலம் தேர்வாகும் மருத்துவம், பொறியியல், செவிலியர் பாடப்பிரிவுகளில் சேர்வோருக்கு நிதி உதவி தரப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நிதியுதவி விரிவுப்படுத்தப்படும்.

அரசு பள்ளியில் படித்து நீட் பாடப்பிரிவுகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அனைவருக்கும் 100 சதவீதம் கட்டண விலக்கு தரப்படும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, கல்லூரிகளில் இளநிலை படிக்கும் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஊக்குவிப்புத் தொகை இந்தக் கல்வியாண்டு முதல் தரப்படும். விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்க நிலம் கையகப்படுத்த முதல்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது தரப்படும் ரூ.5,000 இனி ரூ.8,000 உயர்த்தி வழங்கப்படும். முதுகலை படிப்போருக்கு தரப்படும் ஆண்டுக்கு ரூ.6,800 தொகை ரூ.9,800 ஆக உயர்த்தப்படும்.

புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித்தொகை பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இந்த நிதியாண்டு முதல் இந்த உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தரப்படும். அரசு மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் தலா ரூ.500 உயர்த்தி தரப்படும். வருவாய்த் துறை, உள்துறை, கல்வித்துறை, வேளாண்துறை, சுகாதாரத்துறை, மின்துறை கலை பண்பாட்டுத் துறை ஆகியவற்றில் 2298 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் நிரப்பப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து