முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமியை விமர்சித்த கர்நாடக அமைச்சர் சமீர் மன்னிப்பு கோரினார்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      இந்தியா
Kumaraswamy 2024-11-05

Source: provided

 பெங்களூரு : குமாரசாமியை காலியா என்று அழைத்த கர்நாடக அமைச்சர் சமீர் அகமது கான் மன்னிப்பு கோரியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சன்னபட்னாவில் இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பிரச்சாரத்தில், கர்நாடக வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் சமீர் அகமது கான் கலந்து கொண்டு பேசிய போது, 

பா.ஜ.க.வை விட காலியா குமாரசாமி மிகவும் ஆபத்தானவர்  என்று குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் குமாரசாமி பற்றி நிறவெறி கருத்து தெரிவித்த சமீர் அகமது கானை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. மற்றும் ஜே.டி.எஸ். கட்சியினர் வலியுறுத்தினர். 

அதே சமயம், குமாரசாமி குறித்த தனது தெரிவித்த கருத்து அன்பின் வெளிப்பாடுதான் என்று சமீர் அகமது கான் கூறியுள்ளார். முன்பு ஜே.டி.எஸ். கட்சியில் இருந்த சமீர் அகமது கான், அப்போதைய முதல்வராக  இருந்த குமாரசாமியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்று அறியப்படுகிறார். 

இந்நிலையில், தற்போது அவர் கூறிய கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இது குறித்து சமீர் அகமது கான் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், 

நான் குமாரசாமியை பார்த்து இவ்வாறு அழைப்பது இது முதல் முறை அல்ல. அவர் மீதான அன்பின் காரணமாக ஆரம்பித்தில் இருந்தே இவ்வாறு நான் அழைப்பதுண்டு. அவர் எனது உயரத்தை குறிக்கும் வகையில் குள்ளண்ணா என்று அழைப்பார். 

பதிலுக்கு நான் அவரது தோலின் நிறத்தை வைத்து கரியண்ணா என்று கூறுவேன். எனது பேச்சால் ஜே.டி.எஸ். தொண்டர்களின் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து