முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் திடீர் நீக்கம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

கொச்சி: முகாமில் கலந்து கொள்ளாததால் விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

முகாமில் கலந்து... 

விஜய் ஹசாரே தொடர் வருகிற நாளை (டிசம்பர் 21-ம் தேதி) தொடங்குகிறது. இதற்காக அந்தந்த அணிகள் தங்களது வீரர்கள் குறித்த அணி விவரத்தை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் கேரள அணியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கேரள அணிக்கான முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடியவில்லை.... 

2024-2025 ஆம் ஆண்டு ஷையத் முஷ்டாக் அலி தொடருக்கான கேரள அணியை வழிநடத்திய சஞ்சு சாம்சன் 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்றாலும், கேரள அணியால் நாக்-அவுட் சுற்றுகளுக்கு முன்னேற முடியவில்லை. முதலில் விஜய் ஹசாரே தொருக்கான 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும், இறுதியாக வெளியிட்டப்பட்ட 19 பேர் கொண்ட பெயர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

சல்மான் நிசார்... 

சஞ்சு சாம்சன் தன்னால் முகாமுக்கு வரமுடியாது என்று கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதனால், அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து ஷையத் முஷ்டாக் அலி போட்டியின் போது காயமடைந்த மூத்த வீரர் சச்சின் பேபி பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை. கேரள அணியை சல்மான் நிசார் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் 40 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசியிருந்த சஞ்சு சாம்சன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 2 சதங்கள் விளாசி அசத்தினார். ஷையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு அரைசதம் உள்பட 135 ரன்கள் எடுத்திருந்தார். 

கேரள அணி விவரம்:

சல்மான் நிசார் (கேப்டன்), ரோஹன் குன்னும்மால், ஷோன் ரோஜர், முகமது அசாருதீன் (விக்கெட் கீப்பர்), ஆனந்த் கிருஷ்ணன், கிருஷ்ண பிரசாத், ஜலஜ் சக்சேனா, ஆதித்ய சர்வதே, சிஜோமோன் ஜோசப், பாசில் தம்பி, பாசில், நிதீஷ், ஈடன் ஆப்பிள் டாம், ஷரஃபுதீன் , அகில் ஸ்கரியா, விஸ்வேஷ்வர் சுரேஷ், வைஷாக் சந்திரன், அஜ்னாஸ் (விக்கெட் கீப்பர்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து