முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரு.மாணிக்கம் விமர்சனம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      சினிமா
Mr Manickam-Review 2024-12-

Source: provided

சமுத்திரக்கனி, கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் விற்பனை கடையை நடத்தி வருகிறார். அவரிடம் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பாரதிராஜா, பணம் தொலைந்துவிட்டதால், வாங்கிய டிக்கெட்டுகளை பணம் கொடுத்துவிட்டு பின்னர் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

ஆனால் அவர் வாங்கிய டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு ரூ.1.50 கோடி பரிசு அடித்துவிட, அதை அவரிடம் ஒப்படைக்க சமுத்திரக்கனி முடிவு செய்கிறார். பாரதிராஜா யார்?, எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல் அவரை கண்டுபிடித்து லாட்டரியை அவரிடம் ஒப்படைக்க சமுத்திரக்கனி பயணிக்கிறார். இதற்கு அவரது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அவற்றைத் தாண்டி, லாட்டரி டிக்கெட்டை ஒப்படைத்தாரா இல்லையா என்பதை சொல்வதே ‘திரு.மாணிக்கம்’. படத்தில் மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. அனன்யா, மனைவி, இரண்டு பிள்ளைகளுக்கு தாய், என்று முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் தனது சிறப்பா நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாரதிராஜா, வழக்கும் போல் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. இப்படியும் ஒரு மனிதர் இருப்பரா என்று யோசிக்காமல், இப்படித்தான் இருக்க வேண்டும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமியை பாராட்டியே ஆக வேண்டும். மொத்தத்தில், திரு.மாணிக்கம்’ நேர்மையற்றவர்களை திருத்தும் ஒரு பாடம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து