முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 1,365 கோடி ரூபாய் காணிக்கை மூலம் வருவாய்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

திருமலை, உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுவே பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் ஏழுமலையானை நீண்ட வரிசைகளில் காத்திருந்து தரிசிப்பர்.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பக்தர்களின் உண்டியல் காணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் ஏழுமலையானை 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் ரூ.1,365 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தி உள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து