முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 சின்ன விஷயம் இல்ல விமர்சனம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      சினிமா
35-No-Small-Matter-Review 2

Source: provided

விஷ்வதேவ் - நிவேதா தாமஸ்  தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.. இவர்களது மூத்த மகனான சிறுவன் அருண்தேவுக்கு, கணிதத்தின் மீது ஏற்பட்ட  சந்தேகத்தை எந்த ஆசிரியராலும் தீர்த்து வைக்க முடியாமல் போக,  கணிதமே தவறு என்று சொல்கிறார். 

பள்ளிக்கு புதிதாக வரும் ஆசிரியர் பிரியதர்ஷி புலிகொண்டாவும் அருண் தேவின் சந்தேகத்தை தீர்க்காமல் அவரை நிராகரித்து விடுகிறார். மகனின் நிலையை கண்டு வருந்தும் நிவேதா தாமஸ், அவரது கணித சந்தேகத்தை வாழ்க்கை சம்பவங்கள் மூலம் தீர்த்து வைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா? என்பதைச் சொல்லும் படமே இந்த ‘35 சின்ன விஷயம் இல்ல படம்.

சிறுவன் அருண்தேவை மையமாக கொண்டு கதை நகர்ந்தாலும், அவரது தாயான நிவேதா தாமஸ், ஒட்டு மொத்த கதையையும் நகர்த்தி செல்கிறார். அதே போல், விஷ்வதேவ் ரச்சகொண்டா,  கே.பாக்யராஜ், சிறுமி அனன்யா, மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கெளதமி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு கணிதத்தை தொடர்புபடுத்தி, அதை எளிமையான முறையில் கற்பிக்கும் முறையை இயக்குநர் கையாண்ட விதம் மிகச்சிறப்பு.

இதுபோல் கணித பாடத்தை கற்றுக்கொடுத்தால் மாணவர்கள் அனைவரும் கணிதத்தை கொண்டாடுவார்கள்.  மொத்தத்தில், ‘35 சின்ன விஷயம் இல்ல’ படத்துக்கு 90 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து