முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 1,363 பஸ் நிறுத்தங்களில் 2-ம் கட்ட தூய்மை பணி

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
mmc 2024-12-30

Source: provided

சென்னை: சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 1,363 பஸ் நிறுத்தங்களில் 2-ம் கட்ட தூய்மை பணி நேற்று நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக அனைத்து பஸ் நிலையங்களிலும் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிர தூய்மை பணிகள் நடந்தன.

அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் 2-ம் கட்டமாகத் தூய்மைப் பணிகள் நேற்று நடைபெற்றன. 15 மண்டலங்களில் உள்ள 1,363 பஸ் நிறுத்தங்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  அனுமதியின்றி வைக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. பஸ் நிழற்குடைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பழுதுகள் சரி செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். பயணிகளின் இருக்கைகளும் சுத்தம் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து