முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      உலகம்
Jimi 2024-12-30

Source: provided

வாஷிங்டன் : அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜிம்மி கார்டர் மறைந்தார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு அதிபர் பைடன் உள்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றவர் ஜிம்மி கார்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் அமெரிக்க அதிபராக இருந்தார். அமெரிக்காவின் 39வது அதிபராக இவர் பதவி வகித்தார். விவசாய பின்னணி கொண்ட இவர் ஜாஅர்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு கிடைத்த மக்கள் அபிமானத்தால் ஜார்ஜியா மாகாண ஆளுநர் தொடங்கி அமெரிக்க அதிபர் வரை உயர்ந்தார். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி அவரது 100வது பிறந்தநாள் குடும்பத்தினர், நண்பர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவர் வயது மூப்பு தொடர்பான உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

ஜிம்மி கார்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், “அமெரிக்காவின் இளம் தலைமுறையினரே நீங்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் என்னவென்ற தேடுதலில் இருந்தால், ஜிம்மி கார்டரைப் படியுங்கள். அவர் நம்பிக்கையும், எளிமையும், கோட்பாடுகளும் நிறைந்த மனிதர்.” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிய பல தசாப்தங்களாக போராடியவர் ஜிம்மி கார்டர். மனித உரிமைகளைப் பேண, பொருளாதார, சமூக வளர்ச்சியை மேம்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதனை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கடந்த 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து