முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் மதுபான கடைகளில் மும்மொழி அறிவிப்பு பலகை..? - தமிழ்நாடு அரசு விளக்கம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

சென்னை : டாஸ்மாக்கில் மும்மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் டாஸ்மாக் மதுபான கடைக்கான அறிவிப்பு பலகை மும்மொழியில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் 'ஒருவழியாக தமிழகம் மும்மொழி கொள்கையை டாஸ்மாக்கில் அறிமுகம் செய்துள்ளதாக' கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இது பழைய புகைப்படம் மற்றும் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஆண்டு புதிதாக மதுக்கூடம் (பார்) ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் அந்த பலகை 'பார்' உரிமையாளரால் வைக்கப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் நடவடிக்கை மேற்கொண்டு பலகை அகற்றப்பட்டது. தற்போது எந்த 'போர்டும்' அந்த இடத்தில் இல்லை. பழைய புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து