முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்தான் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      விளையாட்டு
Pak 2024-08-21

Source: provided

முல்தான் : மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

230 ரன்களுக்கு அவுட்...

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி  கடந்த ஜனவரி 17ம் தேதி  முல்தானில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 93 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்திருந்தது. கம்ரான் குலாம் 9 ரன்களுடனும், சௌத் ஷகீல் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

157 ரன்களுக்கு அவுட்...

202 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ஷான் மசூத் அதிகபட்சமாக 52 ரன்களும், முகமது ஹுரைரா 29 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோமெல் வாரிக்கன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

சாஜித் கான், அகமது....

251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இருப்பினும், சாஜித் கான் மற்றும் அப்ரார் அகமதின் அபார பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 55 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆட்ட நாயகன் விருது....

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சாஜித் கான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், நோமன் அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். சாஜித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து