முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேசிப்பாயா விமர்சனம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      சினிமா
Nesippaya 2025-01-20

Source: provided

நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார்.  அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார்.

காதலர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட, அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல் நாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். ஆகாஷ் உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையே, போர்ச்சுக்கல் சென்ற அதிதி ஷங்கர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தகவல் அறிந்த் ஆகாஷ் முரளி, காதலியை காப்பாற்றுவதற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். அவர் நாயகியை காப்பாற்றினரா?, கொலைக்கான பின்னணி என்ன என்பதை காதலும், மோதலும் கலந்து சொல்வது தான் ‘நேசிப்பாயா’ படம்.

ஆக்‌ஷன், சுறுசுறுப்பு என தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் ஆகாஷ் முரளி.  நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கல்லூரி மாணவி மற்றும் வாழ்க்கையை உணர்ந்த முதிர்ச்சியான பெண் என ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சரத்குமார், குஷ்பு, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் என அனைவரும் தங்களது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மொத்தத்தில், நேசிப்பாயா  ரசிகர்களை கவரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து