முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீன் வழங்கும்போது நிபந்தனை: விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனை விதிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையிலேயே இருப்பதாக செய்தி வெளியானது. இந்த செய்தியில் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கின் விசாரணை  நடைபெற்றது.

விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசுத் தரப்பில், பிணைத் தொகை செலுத்த முடியாமல் 104 பேர் பிணை கிடைத்தும் சிறையில் இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் விதிப்பதால், பிணை வழங்குவதில் எந்த பயனும் இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து