முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். பாராளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். அது பிப்ரவரி 3-ம் தேதி, 4-ம் தேதி மற்றும் 6-ம் தேதி நடைபெறும். இதற்காக அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார். 

ஜனாதிபதியின் உரைக்கு பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்வார். இதனை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 1-ம் தேதி) சனியன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக இன்று (31-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். அதன் பின்னர் மார்ச் 10-ம் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடும். கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் மானியக்கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும். முழு பட்ஜெட் கூட்டத்தொடரும் மொத்தம் 27 அமர்வுகளை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து