முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியின் லட்சியங்கள் உத்வேகம் அளிக்கிறது: நினைவுநாளில் பிரதமர் புகழாரம்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      இந்தியா
Modi-2025-01-30

புதுடில்லி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது என அவரது நினைவு தினத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

காந்தியின் 78வது நினைவுதினத்தையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காந்தியின் நினைவுத் தினத்தில் அவருக்கு அஞ்சலிகள். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அவரது லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது. நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து