முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டானது

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
nellai

Source: provided

திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டாகி விபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில், அம்ருத் திட்டத்தின் கீழ் வ.உ.சி. பூங்கா கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அதிக அளவில் இருப்பதால், அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் 7 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வ.உ.சி. பூங்காவிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சறுக்கு பலகையில் ஏறி விளையாடியபோது, சிறுமியின் கால் விரல் எதிர்பாராத விதமாக துண்டாகி விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் துண்டான விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பூங்காவில் முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை ஆண்டியப்பன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து