முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோழபுரம் புனித ஜஸ்டின் மகளிர் கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்ற செய்தி தவறானது: அமைச்சர்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

சென்னை, சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்பது கூறுவது தவறானது என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ம் தேதி வருகை புரிந்தபோது, சிவகங்கை- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வர், முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதல்வர் உடனடியாக அந்த கல்லூரி முன்பாக பஸ்கள் நின்று செல்ல உத்திர விட்டார்.

ஆனால் கல்லூரி முன்பு பஸ்கள் நின்று செல்லவில்லை என்றும் முதல்வர் உத்தரவை பின்பற்றப்படவில்லை என்றும் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,

இந்த செய்தியை தொடர்ந்து, உடனடியாக காரைக்குடி துணை மேலாளர் (வணிகம்) பஸ் நிறுத்தத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், கல்லூரி முதல்வரிடம் சென்று பஸ் நின்று செல்வதை உறுதி செய்தார். 

மேலும், துணை மேலாளரிடம் கல்லூரி முதல்வர், முதல்-அமைச்சருக்கும் எனக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுச்செய்தி கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் பஸ்கள் நின்று செல்கின்றன என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கல்லூரி முன்பாக பஸ் நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து