முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஜி.பி.எஸ். நோய் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை, : மகாராஷ்டிரத்தில் காணப்படக்கூடிய ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதனை புதன்கிழமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:-

மகாராஷ்டித்தில் காணப்படக்கூடிய ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு தமிழ்நாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை எடுக்கும். 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 15-க்குள் முதல்வர் மூலம் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெறும். 

பொண்ணுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய தடுப்பூசி பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரை நேரில் சந்திக்கும்போது வலியுறுத்தப்படும். அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். தில்லி தேர்தல் பிப்ரவரி ஐந்து முடிந்தவுடன் பார்க்கலாம் என கூறியுள்ளார். அவரை சந்திக்கும் போது ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 18 கோரிக்கை பட்டியல்களோடு இதுகுறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து