முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி. காங்கிரஸ் எம்.பி. கைது

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      இந்தியா
Jail

லக்னோ, பாலியல் வன்கொடுமை வழக்கில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., ராகேஷ் ரத்தோர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் தனது வீட்டில் இருந்த காங்கிரஸ் எம்.பி., ராகேஷ் ரத்தோர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணை நான்கு ஆண்டுகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரத்தோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜனவரி 17 அன்று, அந்தப் பெண் புகார் அளித்ததை அடுத்து, உத்தரப் பிரதேச காவல்துறை ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி.,யின் வழக்கறிஞர்களான அரவிந்த் மஸ்தலன் மற்றும் தினேஷ் திரிபாதி ஆகியோர் சீதாப்பூரில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். ஜனவரி 23 அன்று சீதாப்பூரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ நீதிமன்றம் ரத்தோரின் முன்ஜாமின் மனுவை நிராகரித்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்ச் இந்த வழக்கில் தனது முன்ஜாமின் மனுவை நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு ரத்தோர் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து