முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டது ஏன்? அண்ணாமலை விளக்கம்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
Annamalai 2024 11 20

Source: provided

மதுரை: மக்களின் போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டில்லியில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நேற்று அரிட்டாபட்டி சென்றார்.

அங்கு செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசுகையில், “அரிட்டாபட்டி சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசின் மிரட்டலுக்கு எல்லாம் பிரதமர் மோடி அரசு அஞ்சுவதில்லை. மக்களின் போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அன்பின் இலக்கணமாக இந்த பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கே ஒரு சான்று. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வந்திருக்கும் இந்த நாள் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் பிரச்சினை என்றால் மத்திய அரசு ஓடோடிவரும்.

எப்போதும் தமிழகத்திற்கு தோழனாக பிரதமர் மோடி இருப்பார். மண்ணின் மைந்தர்களுக்காக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யவில்லை ” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து