முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் பால திறப்பு விழா: பிப். 11-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
Modi PM 2024-12-20

Source: provided

சென்னை: பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரூ.15,000 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.  இந்தப் பாலம் அமைத்து 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பாலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பயணிகள் இன்றி 60 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இதேபோல, பாலத்தின் நடுவில் உள்ள செங்குத்து இரும்பு கர்டா் மேலே தூக்கப்பட்டு, அதன் வழியாக இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பலை இயக்கியும் சோதனை நடைபெற்றது.  

இந்த நிலையில் பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும், ரூ.15,000 கோடிக்கான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் தொடக்கி வைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து