முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யமுனை நீரை குடிக்க முடியுமா? கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

புதுடில்லி: யமுனை நீரைக் குடியுங்கள், உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன் என்று கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால் விடுத்துள்ளார்.

டில்லியில் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் யமுனையை சுத்தமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால், ஆனால் இன்னமும் அது அசுத்தமாகவே இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

டில்லியில் புதன்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிப் பேசும் விடியோவை பகிர்ந்துள்ளார். அதில், யமுனை ஆற்றை சுத்தம் செய்வதாக முன்னாள் டில்லி முதல்வரின் முந்தைய வாக்குறுதியை சுட்டிக்காட்டி, அவரை ஆற்றில் குளிக்கும்படி சவால் விடுத்தார்.

மேலும், கறுமை நிறத்தில் இருந்த யமுனை ஆற்றின் நீரை ஒரு சின்ன பாட்டிலில் அடைத்து கையில் வைத்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, யமுனை ஆற்றின் ஒரு சொட்டு நீரைப் பருகுங்கள் அரவிந்த் கெஜ்ரிவால். உங்களை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.

தான் புதிய அரசியல் முறையைக் கொண்டு வருவேன் என்றும், ஊழலை ஒழிப்பேன் என்றும், யமுனையை 5 ஆண்டுகளில் சுத்தமாக்குவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இன்னமும் யமுனை அசுத்தமாகவே உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து