Idhayam Matrimony

கார் வெடி குண்டு தாக்குல்: சிரியாவில் 15 பேர் பலி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      உலகம்
Boom

Source: provided

சிரியா : சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் நேற்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் வெடி குண்டு வெடித்ததில் 14 பெண்கள் மற்றும் 1 ஆண் பலியாகினர். மேலும்,15 பெண்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். இருப்பினும், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்கானிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. 

முன்னதாக, கடந்த பிப்.1 அன்று மனிபிஜ் நகரத்தில் நிகழ்த்தப்பட்ட இதேப்போன்ற ஒரு கார் வெடி குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் படுகாயமடைந்தனர். துருக்கியின் ஆதாரவில் இயங்கி வரும் சிரிய தேசிய இராணுவப் பிரிவுகள் மற்றும் அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் அந்நாட்டின் உள்நாட்டுப் போர் முடிவுப் பெற்ற பின்னரும் தொடர்வதினால் மன்பிஜ் நகரத்தில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து