முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin-a 2024-11-25

Source: provided

சென்னை: வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நேற்று (பிப். 3) நடைபெற்றது. பேரணிக்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், அண்ணா வழியில் அயராது உழைப்போம். தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:- எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.

தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம். நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது. வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து