முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க்கில் ரொனால்டோவுக்கு சிலை

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      விளையாட்டு
8-Ram-52-copy

Source: provided

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.

40வது பிறந்த நாள்...

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த பிப். 5 அன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவரது பிறந்த நாளன்று (பிப்.5) நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் ரொனால்டோவின் 12 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலையானது அவரது ரசிகர்களால் திறக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய கலைஞரால்...

போட்டியில் கோல் அடித்த பின்னர் அதனை கொண்டாடும் விதமாக ரொனால்டோ பின்பற்றி வரும் ‘சியூ’ எனும் செய்கையை குறிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இத்தாலிய கலைஞரான செர்ஜியோ புர்னாரி என்பவர் உருவாக்கியுள்ளார். முன்னதாக, போர்த்துல நாட்டின் தேசிய அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கால்பந்து உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலோன் தி’ஓர் விருதை இவர் 5 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து