முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலி்தா பிறந்த நாள் விழா: அ.தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      அரசியல்
ADMK-1-2025-02-06

சென்னை, வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை  நலத்திட்ட உதவிகள் வழங்கி மகளிர் மனம் குளிர சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. மகளிர் அணி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் , முன்னாள் அமைச்சரும்  அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில்  \முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா,எஸ்.வளர்மதி  டாக்டர் சரோஜா,ராஜ லட்சுமி ஆகியோரும் முன்னாள் எம்எல்ஏக்களும் நிர்வாகிகளுமான கணிதா சம்பத, ஏஎஸ்மகேஸ்லவரி , ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்,

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்துணைத்தலைவரும் ஜெயலலிதா பேரவை மாநிலசெயலாளருமான  உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்,. .முன்னாள் முதல்வர் ஜெயலலதாவின்  77-ஆவது பிறந்த நாளான 24.ம்தேதி , அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில்,  மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், மகளிர் பயன்பெறும் வகையிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குதல், கண் தானம், இரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், இலவசத் திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உட்பட மகளிர் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பிப்பது என இக்கூட்டத்தில்  ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.  மகளிர் அணியின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி, பெண்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திச் சிறப்பிப்பது என அக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க. துணையாக இருந்து, டங்ஸ்டன் ஏல முறையை ரத்து செய்ய  பாடுபட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு  அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில், நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து