முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்ச்சூன் பாரிஷால் சாம்பியன்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      விளையாட்டு
8-Ram-58-1-copy

Source: provided

வங்காளதேச பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் சிட்டகாங் கிங்ஸ் அணியை வீழ்த்தி பார்ச்சூன் பாரிஷால் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிது. இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் லீக் தொடரான ஐ.பி.எல். போன்று வங்காளதேசத்தில் 'வங்காளதேச பிரீமியர் லீக்' நடத்தப்படுகிறது. இதன் 11-வது சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் - சிட்டகாங் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற பார்ச்சூன் பாரிஷால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்டகாங் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா நபே மற்றும் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கவாஜா நபே 66 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிரஹாம் கிளார்க்கும் (44 ரன்கள்) அதிரடியாக விளையாட அணியின் ரன் வேகம் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிட்டகாங் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 78 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ச்சூன் பாரிஷால் அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் ரன் வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டனர். கேப்டன் தமிம் இக்பால் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அவருடன் தவ்ஹித் ஹாரிடாய் (32 ரன்கள்), கைல் மேயர்ஸ் (46 ரன்கள்) இருவரும் கணிசமான பங்களிப்பை வழங்க பார்ச்சூன் பாரிஷால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.  ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.

6-வது இடத்தில் தமிழக அணி 

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அபினவ் சஞ் சீவ், மனீஷ் சுரேஷ் குமாா், நிக்கி பூனச்சா உள்ளிட்டோா் அடங்கிய அணி 2-0 என்ற கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

தமிழ்நாடு 13 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 49 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் 39 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது. கா்நாடகம் 30 தங்கம், 12 வெள்ளி, 16 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், மராட்டியம் 23 தங்கம், 39 வெள்ளி, 45 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இலங்கை வீரருக்கு மரியாதை 

100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே  தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள்.  இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி  414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்தனர்.  இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே  தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. டெஸ்ட்டில் மொத்தமாக 7,222 ரன்களுடன் ஓய்வுபெற்றுள்ளார். 16 சதங்கள், 39 அரைசதங்கள் அடித்துள்ள கருணரத்னே கிட்டதட்ட 40 சராசரியுடன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தந்தையானார் பேட் கம்மின்ஸ் 

பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (வயது 31). இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றது. பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆல்பி என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பெக்கி பாஸ்டன் 2வது முறையாக கர்ப்பம் அடைந்தார். இவருக்கு இந்த மாதம் குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பேட் கம்மின்ஸ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த குழந்தைக்கு எடித் மரியா போஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து