முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் வரும் 12-ம் தேதி கோவில் நடை சாத்தப்படும்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      ஆன்மிகம்
Ramanathaswamy 2025-02-04

Source: provided

ராமேசுவரம் : தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 12 அன்று நடை சாத்தப்படுகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிப்ரவரி 12 புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். மேலும் சாயரட்சை பூஜை மற்றும் கால பூஜைகளும் நடைபெறும். காலை 10 மணியளவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். பிற்பகல் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும். மாலை 7 மணியளவில் லெட்சுமண தீர்த்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும் வலம் வருகின்றனர். இரவு 7.30 மணியளவில் தீபாராதனை நடைபெறுகிறது. 

முன்னதாக தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அன்று காலை 10 மணியளவில் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ராமநாதசுவாமி, பரிவதவர்த்தினி அம்பாள் ன் புறப்பாடானதும் கோவில் நடை சாத்தப்படும். அதன்பின்னர் கோவில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இரவு தெப்ப உற்சவத்திற்கு பின் சுவாமி, அம்பாள் ராமநாதசுவாமி கோவிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம, பள்ளியறை பூஜைகள் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து