முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா சுரங்க விபத்து: தெலங்கானா முதல்வருடன் ராகுல் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      இந்தியா
Rahul 2024-12-03

Source: provided

ஐதராபாத் : தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.

தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் நீா்ப்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ராகுல் காந்தியிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். அப்போது மாநில அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை ராகுல் காந்தி பாராட்டினார்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “தெலங்கானாவில் சுரங்கப்பாதையின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் உள்ளே சிக்கியவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, அவா்களை மீட்கும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே சுரங்கத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து