முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அமோகமாக வெற்றி பெறச்செய்ய வேண்டும்: விவசாயிகள் அணி கூட்டத்தில் தீர்மானம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      அரசியல்
ADMK-2025-02-17

சென்னை, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை  அமோக வெற்றி பெறச்செய்ய அக்கட்சியின் விவசாயிகள் பிரிவின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் பச்சைத்துண்டுகள் அணிந்து கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.  விவசாய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.  விவசாயப்பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. விவசாய பிரிவுத்தலைவர் டி. ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்டச்செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், தாடி மா.ராசு காந்தி, காஞ்சி பன்னிர்செல்வம்  முன்னாள் எம்.பி. சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முடிவில் விவசாயப்பிரிவு துணை செயலாளர் செல்வன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை வரும் 24 ம்தேதி சிறப்பாக கொண்டாடுவது என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை  அமோக வெற்றி பெறச்செய்து  இ.பி.எஸ்.ஸை மீண்டும் முதல்வராக்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து