முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 14 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

துபாய்: இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி... 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

விராட் கோலி சாதனை...

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியின்போது, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்தார். இந்த சாதனையை அவர் 287 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளார்.

மூன்றாவது வீரர்...

ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் விராட் கோலியைச் சேரும். அவருக்கு முன்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து முதல் இரண்டு இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்) மற்றும் குமார் சங்ககாரா (14,234 ரன்கள்) ஆகியோர் உள்ளனர். ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடக்க சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்கள் மற்றும் குமார் சங்ககாரா 378 இன்னிங்ஸ்களும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து