முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி தேசிய மொழியாக முன்னேற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      இந்தியா
Rss-2023-04-13

Source: provided

மகாராஷ்டிரா : இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

 மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார், "தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் இல்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்.

நமக்கு ஒரு நிர்வாக அமைப்பு உள்ளது. நமக்கு ஒரு பொதுவான தேசிய மொழி தேவை. ஒருகட்டத்தில், அது சமஸ்கிருதம், ஆனால் இன்று அது சாத்தியமில்லை. எனவே  அது இன்று இந்தியாக மட்டுமே இருக்க முடியும்.

நீங்கள் இந்தியை விரும்பவில்லையென்றால், உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்கவேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்கமுடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழியாக இருக்கும்.

ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால், மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்று தலைவர்  கோல்வால்கர் கூறியுள்ளார். இந்தி படிப்படியாக ஒரு பொதுவான தேசிய மொழியாக முன்னேற வேண்டும், அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயப்படுத்தினால், எதிர்வினை இருக்கும். சுயநல நோக்கங்களுக்காக இந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில், லட்சக்கணக்கான மக்கள் இந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள். எனவே அந்த விஷயத்தில் கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கல்வி நிதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து