எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய 8 இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார்.
பண்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியது: “தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம்-கீழடி. தூத்துக்குடி மாவட்டம்-பட்டணமருதூர். தென்காசி மாவட்டம்-கரிவலம்வந்தநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் -ஆதிச்சனூர், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளளூர் மற்றும் சேலம் மாவட்டம்-தெலுங்கனூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் பயணம் அண்டை மாநிலங்களில் உள்ள பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திரா), மஸ்கி (கர்நாடகா) ஆகிய பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.
மேலும், பல்வேறு ஆழ்கடல் அகழாய்வுகளை தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆண்டு புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களின் ஆலோசனையுடனும், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடும், காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி, ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும். சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்.
சிற்ப அமைதி, உடல் நெகிழ் தோற்றத்தன்மை, எழில்மிகு முத்திரைகள் கொண்ட சிற்பத் திருமேனிகளை வெளிநாட்டவரும் கண்டு வியக்கும் வகையில் மரபுசார் கட்டடக்கலை வடிவமைப்புடன் கூடிய காட்சி அரங்கம் ஒன்று 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்படும்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-03-2025.
14 Mar 2025 -
தமிழகத்தில் 10 புதிய கலை கல்லூரிகள்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, தமிழகத்தின் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்,” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபையில் வரும் 17-ம் தேதி வாக்கெடுப்பு
14 Mar 2025சென்னை, அ.தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து (17-ம் தேதி) திங்கட்கிழமை விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சனை: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
14 Mar 2025சென்னை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது” என்று&n
-
தமிழகத்தின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக மேலும் அதிகரிப்பு
14 Mar 2025சென்னை, கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
-
கருணாநிதி நினைவிடத்தில் தங்கம் தென்னரசு மரியாதை
14 Mar 2025சென்னை, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட முடிவு
14 Mar 2025சென்னை, “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்,” என்று தம
-
மத்திய அரசால் தமிழக நிதி நிலை பாதிப்பு: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விவரிப்பு
14 Mar 2025சென்னை, “மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு சொற்பமான நிதி விடுவித்ததும் மாநில அரசின் நிதி நி
-
20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்
14 Mar 2025சென்னை ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம், ஒசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா, மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா, 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட
-
ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
14 Mar 2025சென்னை, சென்னையில் நேற்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
தொகுதி மறுவரையறை கூட்டம்: கேரள முதல்வருக்கு தி.மு.க. நேரில் அழைப்பு
14 Mar 2025திருவனந்தபுரம், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தி.மு.க.&
-
மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
14 Mar 2025மும்பை : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.
இந்திய அணி வெற்றி...
-
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
14 Mar 20251) 6,100 கி.மீ. நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடியில் மேம்படுத்தப்படும்.
-
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு கு
-
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் தங்கம் தென்னரசு
14 Mar 2025சென்னை, 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
14 Mar 2025டாக்கா : 2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: அதிபர் டிரம்பிற்கு பின்னடைவு
14 Mar 2025வாஷிங்டன் : ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
பணிப்பெண்கள் மீது பயணி தாக்குதல்: அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
14 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் சவன்னா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
-
டாஸ்மாக்கில் பெரும் ஊழல்: எடப்பாடி பழனிசாமி பகீர்
14 Mar 2025சென்னை, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார் 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நட
-
சென்னையில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் சென்னையில் ரூ.
-
பும்ரா பங்கேற்காததால் மும்பை அணிக்கு சிக்கல்?
14 Mar 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐ.பி.எல்.
-
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபரின் நிபந்தனைகள்
14 Mar 2025மாஸ்கோ : 30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.
-
டாஸ்மாக்கில் முறைகேடு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
14 Mar 2025சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்