முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவு: கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

புதுடெல்லி : ஆட்சியில் இருந்தபோது பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிட்டார் கெஜ்ரிவால் - பா.ஜ.க.

கடந்த நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 10 வருடமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றி பெற்றது. ரேகா குப்தா டெல்லி முதல்வர் ஆனார். ஆம் ஆத்மி தோல்விக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறை சென்றது ஒரு காரணம்.

இரண்டாவதாக பா.ஜ.க.வால் முன்னெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஷீஷ்மகால் பிரசாரம். அதாவது, கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது முதல்வர் இல்லத்தை, அதிக செலவழித்து ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என்று பா.ஜ.க. தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது. தங்கத்தில் கழிவறை இருந்ததாகவும் பா.ஜ.க. கூறியது. இதுதொடர்பாக சிஏஜி அறிக்கை கசிந்ததாகவும் கூறியது. மேலும் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் 2015 முதல் 2022 வரை முதல்வரின் பங்களாவைப் பராமரிக்க கெஜ்ரிவால் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவிட்டார் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலைச் சுட்டிக்காட்டி, டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது, ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதல்வரின் பங்களாவை பராமரிக்க மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டார். பங்களாவைப் பராமரிக்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை விசாரிக்க டெல்லி அரசிடம் கேட்போம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து