முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்த், திக்வேஷ்-க்கு அபராதம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

மும்பை இந்தியன்ஸ் உடனான ஐ.பி.எல். போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ரிஷப் பந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான 20ஆவது ஓவரிலும் 4 பீல்டர்கள் மட்டுமே வெளியே வைக்க வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் ஆவேஷ் கான் சிறப்பாக பந்து வீசினார். ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  

லக்னோ சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதிக்கு மீண்டும் தனது பாணியான நோட்புக் டிக் கொண்டாட்டத்துக்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. திக்வேஷுக்கு முந்தைய போட்டியிலும் இதேமாதிரி அபராதம் விதிக்கப்பட்டது. இவர், மொத்தமாக 2 தகுதிக் குறைப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார். திக்வேஷ் ரதி ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய திலக் வர்மா 

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா (25 ரன், 23 பந்து, 2 பவுண்டரி) தொடர்ந்து தடுமாறியதால் அவரை 19-வது ஓவரில் 'ரிட்டயர்டு அவுட்' முறையில் மும்பை நிர்வாகம் வெளியேற்றியது. 

இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட மிட்செல் சாண்ட்னராலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் 'ரிட்டயர்டு அவுட்' ஆன 4-வது வீரர் என்ற மோசமான சாதனைக்கு திலக் வர்மா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ரஷ் வீராங்கனை தோல்வி

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ரிஷப்பை புகழ்ந்த கவாஸ்கர் 

 ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று முன்தினம்  நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இப்போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "ரிஷப் பண்ட் ரன்களை குவிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் தங்கத்திற்கு நிகரானவர்" என்று புகழாரம் சூட்டினார். இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாக். வீரர் பதிலால் அதிர்ச்சி

பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.  அப்போது நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று  தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து