முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்: ராகுல்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

பெகுசராய், பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.

பீகாரில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய பொறுப்பாளர் கன்னையா குமாரின் தலைமையில்  பெகுசராய் நகரில் பேரணி நடைபெற்றது.    இதில் காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி ஊர்வலமாகச் சென்றார். முன்னதாக இந்த பேரணி குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட ராகுல் காந்தி, "வேலையின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, அரசு வேலைகள் குறைப்பு, உங்களுக்குப் பயனளிக்காத தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சினைகள்தான் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள்.

பீகார் இளைஞர்களின் உணர்ச்சிகளை உலகம் காணவும், மாநில அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் வெள்ளை டி-சர்ட் அணிந்து எங்களுடன் சேருங்கள். பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம். பீகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அவர் (ராகுல் காந்தி) பேரணி செல்வதற்குப் பதிலாகப் பிராயச்சித்தம் தேட வேண்டும்.  நரேந்திர மோடி அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளது. பெகுசராயில், அவரது தந்தை(ராஜீவ் காந்தி) 1985 ஆம் ஆண்டு பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையைத் திறப்பதாகக் கூறினார், ஆனால் எதுவும் நடக்கவில்லை. பீகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் சாலைகளையும் நிதிஷ் குமாரின் வளர்ச்சியையும் பார்க்கும்போது அவரது கண்கள் மயங்கிப் போகும்.” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து