முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      இந்தியா
INDIA

Source: provided

மும்பை : இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தந. சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 2500 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. நிப்டியும் சரிவுடனேயே தொடங்கியுள்ளது. ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பால் உலகளவில் வர்த்தப் போர் தொடங்கிவிட்டது எனக் கூறும் அளவுக்கு அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் தொடங்கி இந்திய பங்குச் சந்தை வரை கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன் தாக்கம் நேற்று காலையில் ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியது.

அந்த வகையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று (ஏப்.7) காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2564.74 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 831.95 சரிந்தும் காணப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து