Idhayam Matrimony

திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Thiruvarur 2025-04-07

Source: provided

திருவாரூர் : ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

திருவாரூர் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய விழாவான ஆழி தேரோட்ட விழா நேற்று (ஏப்.7) திருவாரூரில் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்ட உலக பிரசித்தி பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டமானது நேற்று காலை 9.01மணிக்கு தொடங்கியது. 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடத்தை பிடித்து இழுக்க, ஆழித்தேர் நிலையடியிலிருந்து புறப்பட்டது. ஆழித்தேர் புறப்பட்டபோது, ‘ஆரூரா தியாகேசா’ என பக்தி முழக்கமிட்டு ஆரவாரத்துடன் பக்தர்கள் உற்சாகமாக தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் பஞ்ச வாத்தியங்களை இசைத்து தேரோட்டத்தில் பங்கேற்றுள்ள மற்ற பக்தர்களை சிவனடியார்கள் உற்சாகப்படுத்தினர். 

இந்த தேரோட்டத்துக்காக வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் சங்கமித்துள்ள நிலையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் ஆங்காங்கே மருத்துவ உதவி குழுக்கள் மருத்துவ உதவிக்கு தயார் நிலையில் உள்ளனர், நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்றன. இந்த ஆழித் தேரோட்ட விழாவுக்காக திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து