முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

62 ஆயிரம் வீட்டு வசதிவாரிய வீடுகள் புதுப்பிப்பு திருவண்ணாமலை ஏழை மக்களுக்கு 320 வீடுகள்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
Muthusamy 2023-07-27

சென்னை, சென்னை மற்றும் இதர நகரங்களில்வாரியத்தின் பராமரிப்பிலுள்ள 134திட்டப்பகுதிகளில் 62,197 அடுக்குமாடிகுடியிருப்புகளுக்கு ரூ.170.00 கோடி மதிப்பீட்டில்புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

தமிழக சட்டபேரவையில்  வீட்டு வசதி மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் முத்துசாமி அளித்த அறிவிப்புகள் சென்னை மற்றும் இதர நகரங்களில் வாரியத்தின்பராமரிப்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில்வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும்மேம்படுத்தப்பட்ட வசதியினை உறுதி செய்து,அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகமாநில நிதி மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறையால்செயல்படுத்தப்படும் அயோத்திதாச பண்டிதர்குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன்ரூ.170.00 கோடி திட்ட மதிப்பீட்டில் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படும். பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் வாரியத்தின்பராமரிப்பிலுள்ள 8,352 அடுக்குமாடிகுடியிருப்புகளுக்கு ரூ.70.00 கோடிமதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும்.

பெரும்பாக்கம் மறுகுடியமர்வு திட்டப்பகுதியில்அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களுக்குபாதுகாப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட வீட்டு வசதிஅளித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்வகையில் இக்குடியிருப்புகளுக்கு ரூ.70. கோடி திட்டமதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும். ஒக்கியம் துரைப்பாக்கம் - எழில் நகர்  திட்டப்பகுதியில் வாரியத்தின் பராமரிப்பிலுள்ள6,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.40.00கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும. ஒக்கியம் துரைப்பாக்கம் - எழில் நகர்\மறுகுடியமர்வு திட்டப்பகுதியில் வாரியத்தின்பராமரிப்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில்வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும்மேம்படுத்தப்பட்ட வீட்டு வசதி அளித்து அவர்களதுவாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஏதுவாகஇக்குடியிருப்புகளுக்கு ரூ.40.00 கோடி திட்டமதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும்..திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக 320அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.54.40 கோடி திட்டமதிப்பீட்டில் கட்டப்படும். இக்குடியிருப்புகள் நகர்ப்புறஏழை குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார், .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து