முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளுக்கு வரதட்சணை கொடுமை: திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      தமிழகம்
NLI 2025-04-16

Source: provided

நெல்லை : இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, 2 மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கரம் பிடித்த நிலையில், மகளுக்கு வரதட்சணை கொடுமை கொடுக்கப்பட்டதாக நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாக கனிஷ்கா தனது தாயுடன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அதன் மூலம் கணவருடன் தினமும் சண்டை ஏற்பட்டதாகவும் கனிஷ்கா தெரிவித்துள்ளார். தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக கனிஷ்கா தெரிவித்துள்ளார். எனவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து