முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை மிஸ் செய்கிறோம்: பாக். முன்னாள் கேப்டன்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rajat--2023-12-21

Source: provided

லாகூர் : ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை நாங்கள் உண்மையில் மிஸ் செய்கிறோம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித்  லத்தீப் தெரிவித்துள்ளார்.

விளையாட தடை... 

ஐ.பி.எல். தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, பாகிஸ்தான் வீரர்கள் 12 பேர் ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்று விளையாடினர். அதன் பின், அந்த ஆண்டின் பிற்பகுதியில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடாததே காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித்  லத்தீப் தெரிவித்துள்ளார்.

மிஸ் செய்கிறோம்...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை நாங்கள் உண்மையில் மிஸ் செய்கிறோம். ஐ.பி.எல். தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடியிருந்தால், கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் பாகிஸ்தானின் வியாபாரம் என இரண்டுமே அதிகரித்திருக்கும். எங்களது வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடினால், அதனை கண்டிப்பாக எங்களது நாட்டில் யாராவது ஒளிபரப்ப முன்வருவார்கள்.

உலகத் தர வீரர்களுடன்...

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவினை பாருங்கள். அவர்களது நாட்டிலிருந்து வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறார்கள். பாட் கம்மின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ககிசோ ரபாடா போன்ற உலகத் தரத்திலான வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.

சிறப்பாக விளையாடுகின்றனர்... 

ஐ.பி.எல். தொடரின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. முதலில் ரஷித் கான் ஐ.பி.எல். தொடரின் மூலம் வெளி உலகிற்கு அதிக அளவில் தெரியத் தொடங்கினார். தற்போது, நூர் அகமது, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ஃபஸல்ஹக் ஃபரூக்கி போன்ற வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வளர்ச்சியடைந்து வருகின்றனர். ஐ.பி.எல். தொடரில் மட்டுமல்லாது, சர்வதேசப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து