முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளோம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1-2025-04-08

சென்னை, கவர்னருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது என்று சட்டசபையில் பெருமிதம் தெரிவிதத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு கவர்னர்  ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஏப்.8) தீர்ப்பளித்தது. அதில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக கவர்னரின் செயல் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியதாவது: அவைக்கு ஒரு மகிச்சியான செய்தியை தெரிவிக்க விரும்பிகிறேன். கவர்னருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, பல முக்கிய சட்ட முன்வடிவுகளுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.

அதை நாம் மீண்டும் அவருக்கு அனுப்பி வைத்தோம். 2-வது முறை சட்டமன்றம் நிறைவேற்றிய, சட்டமுன்வடிவுகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என அரசியலமைப்பு வரையறுத்த போதிலும், இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி வந்தார். மேலும் அவருக்கு அதிகாரம் இருப்பதாக சொல்லிவந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று, கவர்னர் சட்ட முன்வடிவுகளை நிறுத்தி வைத்திருந்தது, சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்ரை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து