முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு கவர்னரின் செயல் சட்டவிரோதமானது: தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு :

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக கவர்னிரின் செயல் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தீர்ப்பில், கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைக்க, ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவையும் விதித்துள்ளது.

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஏப்.8) தீர்ப்பளித்தது.

சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது. பிரிவு 200-ன்படி, முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி கவர்னரிடம் சமர்ப்பித்தால், கவர்னர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.

அரசியலமைப்பில் கவர்னருக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. 2-வது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை ஜனாதிபதி பரிந்துரைக்கும் வாய்ப்பு கவர்னருக்கு இல்லை. கவர்னர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. அந்த வகையில், ஜனாதிபதியின் பரிசீலனைக்காக கவர்னர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.

கவர்னரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம். கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்துகிறது.

கவர்னர் மாநிலத்தின் முறையான தலைவர் என்றும் அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் தனது அதிகாரங்களை பயன்படுத்துகிறார் என்றும் கடந்த கால அரசியலமைப்பு பெஞ்ச் முடிவுகளை சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

1) கவர்னர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ப விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

2) ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும், தத்துவஞானியாகவும் தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.

3) கவர்னர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முன்னோடி. 

4) கவர்னர் ஒரு ஊக்கியாக இருக்க வேண்டும், தடுப்பவராக இருக்கக்கூடாது.

5) கவர்னர்கள் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும்.

6) அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தின்படி நடந்து கொள்ள வேண்டும்.

7) தங்களது நடவடிக்கைகள் குறித்து அவர்களே ஆய்வு செய்ய வேண்டும்.

8) மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடு நிர்ணயம்.

9) மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைக்க ஒரு மாதம்.

10) மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால் 3மாதங்கள்.

11) மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக ஜனாதிபதியின் பரிசீலனைக்கு  மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால் 3 மாதங்கள். 

12) கவர்னர்களால் மறுபரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து