முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      தமிழகம்
RBU 2025-04-07

Source: provided

சென்னை : சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.

தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில்,கடந்த திங்கட்கிழமை  சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் ' யார் அந்த தியாகி ' என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழலை பற்றி விவாதிக்குமாறு பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பேட்ஜ் அணிந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றி, முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க சட்டப்பேரவையில் இருந்து ஒரு நாள் மட்டும் சஸ்பென்ட் செய்தார்.

இதையொட்டி நேற்று சட்டப்பேரவைக்கு வந்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்து கவனம் ஈர்த்தனர். நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையனும் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார். முதல்வர் விமர்சனம். இதற்கிடையில் அ.தி.மு.க.வினர் கருப்புச் சட்டை அணிந்து வந்ததை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து