முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து தமிழக கவர்னர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      தமிழகம்
RN-Ravi 2023 04 05

சென்னை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னர்  விடுவிக்கப்படுவதாக தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று (ஏப். 8) அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. எந்த மசோதாவை அனுப்பினாலும் அவற்றுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இதை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில்  வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம்  அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார். 2 ஆண்டுகாலமாக 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததால், சுப்ரீம் கோர்ட்டே 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது 

 மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அதன் மீது அவர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கும் முடிவை கவர்னர் எடுத்தால் அதனை 3 மாத காலத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கும் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே,  வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னர் விடுவிக்கப்படுகிறார். இனி தமிழ்நாடு அரசு யாரை முன்மொழிகிறதோ அவர்தான் வேந்தராக இருப்பார்" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து