முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடேவில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு அணி

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      விளையாட்டு
Bhuvneshwar-Kumar 2024-04-1

Source: provided

மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே ஸ்டேடியத்தில் மும்பையை பெங்களூரு அணி வீழ்த்தியது. 

பந்துவீச்சு தேர்வு...

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

221 ரன்கள் குவிப்பு...

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களும், ரஜத் படிதார் 64 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திரில் வெற்றி... 

பின்னர் 222 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் திலக் வர்மா 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு... 

இதன் மூலம் வான்கடே மைதானத்தில் 2015-ம் ஆண்டுக்குப்பின் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற 10 ஆண்டு கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து