முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுதேன்: ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கம்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      விளையாட்டு
Shreyas -Ishaan-Kishan

Source: provided

முல்லன்பூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுததாக  பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கேப்டன்...

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆடி வருகிறது. பஞ்சாப் அணி இதுவரை 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து சிறப்பாக செயல்படும் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது ஐ.பி.எல். தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அழுதது எப்போது?

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 3 போட்டிகளில் 159 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரிடம் கடைசியாக எப்போது அழுதீர்கள் என்று பஞ்சாப் அணி நிர்வாகத்தின் சமூக வலைதள ஊடகத் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, கடைசியாக நான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் நாள் பயிற்சி செய்யும் போது அழுதேன். அன்றைய நாளில் நிறைய அழுதேன்.

எதுவுமே சரியில்லை...

ஏனெனில், வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்த போது எனக்கு எதுவுமே சரியாக செல்லவில்லை. அதனால் என் மீதே கோபமடைந்த நான் அழுதேன். சொல்லப்போனால் நான் எளிதாக அழக்கூடியவன் கிடையாது. அதையும் தாண்டி அழுதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அசத்திய வேகத்தில் சாம்பியன்ஸ் டிராபியிலும் அசத்துவேன் என்று நினைத்தேன்.

கடினமாக இருந்தது...

ஆனால், துபாயில் பிட்ச் வித்தியாசமாக இருந்ததால் முதல் நாளிலேயே அதற்கு என்னை நான் உட்படுத்திக் கொள்வது கடினமாக இருந்தது. அதனால் பயிற்சி முடிந்த பின் நான் எக்ஸ்ட்ராவாக மீண்டும் பயிற்சி செய்ய விரும்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்காததால் மிகவும் கோபமடைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து