முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனில் கவாஸ்கர் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      விளையாட்டு
Gavaskar 2023-10-22

Source: provided

இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:- பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது.  இந்த முடிவு இந்தியா-இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது.  வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

_____________________________________________________________________________________________

பா.ஜ.க.வில் இணைந்த ஜாதவ்  

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐ.பி.எல். சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் சரியாக சோபிக்காத கேதர் ஜாதவ், கடந்தாண்டு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில், மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.  

இதுபற்றி ஜாதவ் கூறுகையில், “சத்ரபதி சிவாஜிக்கு தலைவணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் தலைமையில் பா.ஜ.க. சிறப்பாக செயல்படுகிறது. அதனால், பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்” என்றார். இதற்கு முன்னதாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர், இர்பான் பதான், முகமது அசாரூதின், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோரின் வரிசையில் கேதர் ஜாதவ்வும் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். 

_____________________________________________________________________________________________

நியூசி., பயிற்சியாளர் விலகல் 

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (டி20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேரி ஸ்டெட் பேசியதாவது: பயிற்சியாளராக ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனது எதிர்காலம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.  கடந்த 6-7 மாதங்கள் மிகவும் பிஸியாக இருந்தது. எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும். பயிற்சியாளராக என்னால் தொடர்ந்து செயல்பட முடியும் என நினைக்கிறேன். ஆனால், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்றார்.

_____________________________________________________________________________________________

தாக்குரின் 100-வது ஐ.பி.எல். 

இந்த சீசனில் ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வாகாமல் இருந்து பின்னர் காயம் காரணமாக விலகியவருக்குப் பதிலாக மாற்று வீரராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேர்ந்தார். லக்னோ அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஷர்துல் தாக்குர் தனது 100-ஆவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக சிறப்பு சீருடையை ஜாகீர் கானிடம் இருந்து பெற்றார். 

இதற்கு முன்பாக சிஎஸ்கே அணியில் விளையாடிய ஷர்துல் தாக்குர் இந்தியாவுக்கு டெஸ்ட் அணியில் முக்கியமான வீரராக இருக்கிறார். 100 ஐ.பி.எல். போட்டிகளில் 101 விக்கெட்டுகள் 315 ரன்கள் எடுத்துள்ளார். 138.15 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் ஷர்துல் தாக்குர் ஐ.பி.எல். தொடரில் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

_____________________________________________________________________________________________

ரோகித் ஷர்மா ரியாக்ஷன் 

ஐ.பி.எல். தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது. இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இப்போட்டியின்போது தன்னை தானே இம்பாக்ட் வீரர் ஆக ரோகித் சர்மா அறிவித்து கொண்டார். இம்பாக்ட் வீரர் உள்ளே வரும்போது நடுவர் கொடுக்க வேண்டிய சிக்னலை ரோகித் கொடுத்தார். ரோஹித் ஷர்மாவின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலானது. 

_____________________________________________________________________________________________

ஒப்பந்த பட்டியல் வெளியீடு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை அறிவித்துள்ளது. 18 வீரர்கள் கொண்ட அந்த பட்டியலில் முன்னணி அதிரடி வீரரான ஹென்ரிச் கிளாசெனின் பெயர் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹைபிரிட் ஒப்பந்தம் அடிப்படையில் டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசெனை சேர்த்துள்ளது. இவர்கள் இருவரும் முக்கியமான இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. தொடர்களின்போது அணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் 18 வீரர்கள் கொண்ட ஒப்பந்த பட்டியல்:- டெம்பா பவுமா, டேவிட் பெடிங்ஹாம், நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், க்வேனா மபாகா, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ். ஹைபிரிட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென். இந்த ஒப்பந்த காலம் வரும் ஜூன் மாதம் தொடங்கி 2026 மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து